ஹவாலா, உண்டியல் முறையை இலங்கையில் பதிவு செய்ய வேண்டும் ; கோப் குழு சபையில் அறிவிப்பு

0
4
Article Top Ad

உண்டியல் முறை மற்றும் ஹவாலா முறை ஆகிய இரண்டும் இலங்கையில் சட்டவிரோதமானது அல்ல என பொது நிதி தொடர்பான குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பொது நிதி தொடர்பான குழுவின் சில பிரேரணைகளை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஹவாலா மற்றும் உண்டியல் முறைகள் நம் நாட்டில் சட்டவிரோதமானது அல்ல. ஆனால் அவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தப்படவில்லை. எனவே, இந்த அமைப்புகளின் மூலம் சர்வதேச பரிவர்த்தனைகளை நடத்துபவர்கள் 2024 ஜூன் முதல் 2025 மே வரையிலான 12 மாத காலத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என பொது நிதி தொடர்பான குழுவின் முன்மொழிவொன்றை ஹர்ஷ டி சில்வா சபைக்கு சமர்ப்பித்தார்.

இந்த விடயம் தொடர்பில் முழுமையான மீளாய்வை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொது நிதி தொடர்பான குழு மத்திய வங்கியிடம் கோரியுள்ளதாகவும் குறித்த பிரேரணை அங்கீகரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here