போராட்டக்காரர்கள் இந்த அரசாங்கத்தின் காலத்திலும் சிஐடிக்கு அழைக்கப்படுகின்றார்கள்

0
11
Article Top Ad

வடக்கு, கிழக்கில் செயற்பாட்டாளர்கள் மீதான பொலிஸ் அடக்குமுறை புதிய அரசாங்கத்தின் கீழும் தொடர்கிறது.

20 நாட்களுக்கும் மேலாக, முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, மியன்மாரின் பயங்கரங்களில் இருந்து தப்பிவந்த ரோஹிங்கியாக்களை அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என வலியுறுத்தும் வகையில், போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவில் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தமைக்காக அரச சார்பற்ற அமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 9) நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள வேண்டியுள்ளதாகவும், அதுத் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோவிற்கு, பொலிஸ் அறிவித்தல் படிவம் 265 ஊடாக ஜனவரி 12 ஆம் திகதி விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி காலை 9.00 மணியளவில் கொழும்பு 01 பழைய பொலிஸ் தலைமையகக் கட்டிடத்தில் அமைந்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் வர்த்தகக் கடத்தல் விசாரணைப் பிரிவின் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் எதிர்வரும் 15ஆம் திகதி தான் விசாரணைக்கான சமூகளிக்க முடியாத நிலைமையில் இருப்பதாகவும், ஆகவே மற்றுமொரு தினத்தை வழங்குமாறும் ஜாட்சன் பிகிராடோ கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி காலை 10 மணிக்கு முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியாக்களை நாடு கடத்தக் கூடாது என கோரி கடந்த ஜனவரி 09 ஆம் திகதி முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கொழும்பில் இருந்து முல்லைத்தீவு சென்ற பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோவும் கலந்துகொண்டார்.

மியன்மாரில் இருந்து தப்பி வந்த ரோஹிங்கியாக்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பக்கூடாது என கோரி சிவில் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்டவர்கள் 2025 ஜனவரி 10 வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதோடு ஜனாதிபதி செயலகத்திடம் கடிதமொன்றையும் கையளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நவ சமசமாஜக் கட்சியுடன் இணைந்த காணாமல் போனோர் தொடர்பில் தேடியறியும் குழு தலைமைத் தாங்கியது.

Protesters in Colombo, Sri Lanka, rally against Ranil Wickremesinghe after he was elected by lawmakers in Parliament as the new president on Wednesday, July 20, 2022. Wickremesinghe, a canny political survivor with ties to the exiled former president, inherits a nation in deep crisis. (Atul Loke/The New York Times)