முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உட்பட பல சலுகைகளை அரசியலமைப்பின் விதிகளின்படி குறைக்க முடியாது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு தமது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறைக்கப்படுவதை அரசியலமைப்புச் சட்டம் தடுக்கவில்லை.
மகிந்த ராஜபக்ச தற்போது வசித்து வரும் 30,000 சதுர அடி வீட்டிற்குப் பதிலாக மற்றொரு வீட்டை வழங்குவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உட்பட பல சலுகைகளை அரசியலமைப்பு திருத்தம் இல்லாமல் குறைக்கவோ அல்லது இரத்து செய்யவோ முடியாது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை வெட்டுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை விசாரிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தக் குழுவை நியமித்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.