அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சனிக்கிழமை முதல் கனடா பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கத் தீர்மானித்துள்ளார். இதைப் பற்றிய அறிவிப்பை அவர் வியாழக்கிழமை ஓவல் அலுவலகத்தில் நிருபர்களுக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
“கனடா எங்களுக்கு எண்ணெய் அனுப்புகிறது, ஆனால் அது சரியான விலையிலா என்பது தான் முக்கியம். எங்களை நியாயமாக நடத்தினால் மட்டுமே எண்ணெய் மீது வரி விதிப்பது பற்றி முடிவு செய்வோம்.”
முதலில், டிரம்ப் இந்த வரிகளை கனடா மற்றும் மெக்சிகோவை குற்றம்சாட்டுவதற்காகப் பயன்படுத்தினார். அவரின் சொல்வதைப் பொறுத்தவரை, இந்த நாடுகள் அயல் நாட்டில் இருந்து சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருள்களை தடுக்காததால் இந்த நடவடிக்கைக்கு தள்ளப்பட்டதாகக் கூறினார். ஆனால் இப்போது அவர் தனது குற்றச்சாட்டுகளை வர்த்தகப் பற்றாக்குறையுடன் (Trade Deficit) தொடர்புபடுத்தி உள்ளார்.
கனடாவின் பதில்:
கனடா இன்னும் இந்த வரிவிதிப்பைத் தவிர்ப்பது அன்றேல் இறுதித் தளர்வுகளைப் பெற முயற்சி செய்து வருகிறது. நிதி அமைச்சர் டொமினிக் லெப்லாங்க், அமெரிக்க வணிக செயலாளர் பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஹோவர்ட் லூட்நிக்கிற்கு கனடாவின் எல்லை பாதுகாப்பு முயற்சிகளை விளக்கும் மூன்று நிமிட வீடியோவை அனுப்பியுள்ளார்.
இந்த வீடியோவை அவர் புதன்கிழமை இரவு லூட்நிக்கிற்கு அனுப்பினார். கனடா இந்த முயற்சி மூலம் அமெரிக்க அரசை விலக்குமுறை வரிகளை ரத்து செய்ய பிரயத்தனப்படுத்துகின்றது.