இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு

0
3
Article Top Ad

ஜனவரி மாதத்தில் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் 5,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) இதனை தெரிவித்துள்ளது.

மேலும், டெங்கு தொடர்பான இரண்டு இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் 16 ஆபத்துள்ள டெங்கு வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 764 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 674 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட (CMC) பகுதிக்குள் 608 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

காலி மாவட்டத்தில் 315 டெங்கு நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 303 டெங்கு நோயாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 278 டெங்கு நோயாளர்களும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 201 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here