Article Top Ad
மின்னசோட்டாவின் மின்னியேப்பொலிசிலிருந்து டொரொண்டோ Pearson விமான நிலையத்துக்கு வந்த டெல்டா ஏர் லைன்ஸின் Delta900 விமானம் (விமான எண் 4819) இன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி, பனியில் மூடப்பட்ட ஓடுபாதையில் தலைகீழாக நிற்கும் நிலையில் முடிந்தது.
அவசர உதவி குழுக்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்தன. விமானத்தில் இருந்த அனைவரும் (பயணிகள் மற்றும் குழு உறுப்பினர்கள்) கணக்கில் சேர்க்கப்பட்டனர். ஆனால் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானம் (நோந்தணிப்பு எண் N932) 16.6 ஆண்டுகள் பழைய Bombadier CRJ-900LR ஆகும். மேலும் எண்டெவர் ஏர் நிறுவனத்தால் டெல்டா கனெக்ஷன் சேவையாக இயக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம் தற்போது விசாரணையில் உள்ளது.