ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் முயற்சி

0
11
Article Top Ad

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம், கிழவன்குளம், பதினெட்டாம் போர் , கொக்காவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏ_ 9 வீதியின் இரண்டு புறங்களிலும் உள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்கள் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறியும் அனுமதிப்பத்திரங்கள் பெறப்படாததும் சட்டவிரோதமாக ஆற்றிலே உழவு இயந்திரங்களை விட்டு மணல்களை ஏற்றி காட்டுப்பகுதிகளிலேயே மணல்களை பறித்து காட்டுக்குள் டிப்பர் வாகனங்களை கொண்டு சென்று மண் ஏத்துகின்ற மரம் கடத்துகின்ற பல்வேறு குற்ற செயல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பதினெட்டாம் போர் பகுதியில் இன்றைய தினம் நண்பகல் வேளையிலே ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் குறித்த விடயங்களை செய்தி சேகரிக்க சென்றிருந்தார்.

இதன்போது ஏ_9 வீதியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் காட்டு பகுதியில் மணல் கொண்டு வந்து குவிக்கப்படுவதை காணொளி பதிவு செய்து கொண்டிருந்தபோது NP BFR 8429 மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் ஊடகவியலாளர் தவசீலனது ஒளிப்படக்கருவியை பறிக்க முற்பட்டதோடு ஊடகவியலாளர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டதோடு கொலை அச்சுறுத்தல் விடுத்த நிலையில் மாங்குளம் பொலிஸாரின் உதவியுடன் தவசீலன் குறித்த இடத்தில் இருந்து வெளியேறியுள்ளார்

காட்டுக்குள் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவது மாத்திரமின்றி அங்கு வருகைதந்து யார் காணொளி எடுக்க சொன்னது என்றும் காணொளி எடுக்க விடாது தடுத்து சட்டவிரோத மணலுடன் நின்ற உழவு இயந்திரத்தை அந்த இடத்தில் இருந்து எடுத்து சென்றதோடு ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு வந்த மாங்குளம் பொலிஸார் குறித்த காட்டுக்குள் செல்லும் வீதியை ஜேசிபி இயந்திரம் கொண்டு வெட்டி குறித்த காட்டுக்குள் செல்லமுடியாதவாறு செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் , மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here