அதிகமானவர்களை நாடுகடத்தும் கனடா! 2024ல் திருப்பியனுப்பப்பட்ட 7500 பேரில் அதிகமானவர்கள் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள்

0
37
Article Top Ad

 

2024 ஆம் ஆண்டில், கனடா 7,500 மக்களை நாடுகடத்தியுள்ளது . இது 2015க்குப் பிறகு அதிகமான எண்ணிக்கையாகும். பெரும்பாலானோர் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களாவர்.

அரசின் தகவல்படி, வெளியேற்றப்பட்டவர்களில் 79% பேர் அகதி கோரிக்கை மறுக்கப்பட்டவர்கள். மேலும், 11% பேர் குடியேற்ற விதிகளை மீறியதால், 7% பேர் குற்றச்செயல்களுக்காக வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் அகதிகள் விண்ணப்பிக்க அதிகரித்ததால், குடியேற்ற அமைப்பு மீது அழுத்தம் அதிகரித்துள்ளது.

இந்த நாடுகடத்தல் நடவடிக்கையை  முன்னெடுப்பதற்காக, கனடா அரசு மூன்று ஆண்டுகளுக்கு C$30.5 மில்லியன் ஒதுக்கியுள்ளது. இது குடியேற்ற கட்டுப்பாட்டை கடுமையாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

மனித உரிமை அமைப்புகள் சிலரை மேல்முறையீடுகள் முடிவடையாமல் வெளியேற்றுவதை குறித்துக் கவலை தெரிவிக்கின்றன. சிலர் மிக ஆபத்தான நிலைகளுக்கு திருப்பி அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, குடியேற்றக் கட்டுப்பாட்டை அதிகப்படுத்துவதற்கான அழுத்தத்தை எதிர்கொள்கிறார். இது வீடமைப்பு மற்றும் பொதுச்சேவைகள் மீதான பாதிப்பை குறைக்க உதவும் என அரசு கருதுகிறது.

செய்தி மூலம்: ரொய்டர்ஸ் CTV https://www.ctvnews.ca/politics/article/canada-deports-more-people-predominantly-those-rejected-for-refugee-status/