உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி

0
16
Article Top Ad

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் களமிறங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராகி வருகின்றது. இதற்கமைய கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது கொழும்புவாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி கொழும்பு மாநகர சபையில் ஆசனங்க ளைக் கைப்பற்றுவது தொடர்பில் கட்டம் கட்டமாக ஆலோசனை நடைபெறவுள்ளது.

இது குறித்து கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் கொழும்புக் கிளைத் தலைவர் சட்டத்தரணி சி.இரத்தின வடிவேல் சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய முதற்கட்டமாக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு கட்சியின் செயற்பாட்டாளர்களிடமி ருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இந்தத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புப வர்கள் தமது முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், வட்டாரம், அரசியல் செயற்பாடுகளில் கொண்டிருக்கும் அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விண்ணப் பத்தை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடிய வகையில் செயலாளர், இலங்கைத் தமிழரசுக்கட்சி, இலக்கம் 40, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியின் ஊடாக கட்சியின் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிவைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தற்போது நாட்டில் தோற்றம் பெற்றிருக்கும் அரசியல் கலாசாரத்துக்கு ஈடுகொடுக்கும் விதமாகவும், கொழும்புவாழ் தமிழ் மக்களால் நீண்டகால மாக முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையிலும் கட்சியினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here