அவுஸ்திரேலிய டென்னிஸ் ஜாம்பவான் ஸ்டோல் காலமானார்

0
10
Article Top Ad

1960 ஆம் ஆண்டுகளில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்ற அவுஸ்திரேலிய டென்னிஸ் ஜாம்பவான் பிரெட் ஸ்டோல் (Fred Stolle) காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 86 ஆகும்.

ஸ்டோல் 1965 இல் பிரெஞ்சு ஓபன், 1966 இல் அமெரிக்க ஓபன் ஆகியவற்றை வென்றார்.

மேலும் விம்பிள்டனில் மூன்று பட்டங்கள் உட்பட ஆறு கிராண்ட்ஸ்லாம்களில் இறுதிப் போட்டியை எட்டினார்.

அவர் 10 கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் இரட்டையர் பட்டங்களையும் ஏழு கலப்பு இரட்டையர் பட்டங்களையும் வென்றுள்ளார்.

டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அவர் ஒரு பயிற்சியாளராகவும் பின்னர் வர்ணனையாளராகவும் பணியாற்றினார்.

அவரது மறைவு குறித்து பதவிட்டுள்ள டென்னிஸ் அவுஸ்திரேலியா, அதன் சிறந்த வீரர்களில் ஒருவரை இழந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here