ஜுன் மாதத்தில் இலங்கையில் தேசிய ஊடாக கொள்கை அறிமுகம்

0
11
Article Top Ad

தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜுன் மாதத்தில் வெளியிடப்பட உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுவரும் வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

”அரச ஊடகங்கள் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பின்னிலையில் உள்ளன. அவற்றை தொழில்நுட்பமயப்படுத்த வேண்டும். இதற்கான ஜப்பான் அரசு நன்கொடையை வழங்கியுள்ளது. ஏனைய ஊடகங்களுக்கு நிகராக அரச ஊடகங்களை கட்டியெழுப்ப வேண்டும்.

ஊடகவியலாளர்களுக்கு 100 புலமை பரிசில்களை வழங்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் தமது தொழில் திறனை அதிகரித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஊடக ஒழுக்க கோவையொன்றை அவசியமாக உள்ளது. இதுகுறித்தும் கலந்துரையாடப்படுகிறது. எதிர்வரும் ஜுன் மாதம் தேசிய ஊடகக் கொள்கையொன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதேவேளை, இலங்கை மன்ற கல்லூரியை நாட்டுக்கு பயன் உள்ள வகையில் மறுசீரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளும் இடம்பெற்றுள்ளன.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here