சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா – ரோஹித் சாதனை

0
7
Article Top Ad

12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ருநாள் கிரிக்கெட்டில் பெரிய பட்டத்தை ரோஹித் சர்மா தலைமையிலான அணி வென்றுள்ளது.

மார்ச் 9, நேற்று ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடந்த 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதனால், இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அவுஸ்திரேலியாவை முந்தி, மூன்று முறை சாம்பியன்ஸ் டிராபியை வென்ற முதல் அணியாக இந்தியா ஆனது.

அதேநேரம், தோனிக்குப் பின்னர், பல ஐ.சி.சி கிண்ணங்களை வென்ற இரண்டாவது இந்திய தலைவர் என்ற பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றார்.

நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 50 ஓவர் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 251 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்படி வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா 4 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியுள்ளது.

நியூசிலாந்து அணி சார்பில் வில் யங் 15 ஓட்டங்களையும், ரச்சின் ரவீந்திரா 37 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 11 ஓட்டங்களையும், டேரில் மிட்செல் 63 ஓட்டங்களையும், டொம் லெதம் 14 ஓட்டங்களையும், க்ளென் பிலிப்ஸ் 34 ஓட்டங்களையும், மைக்கேல் பிரேஸ்வெல் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களையும், மிட்செல் சாண்ட்னர்(c) 08 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணி சார்பாக வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் தலா 02 விக்கெட்டுகளையும், முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர், வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி சார்பில், ரோஹித் சர்மா(c) 76 ஓட்டங்களையும், ஷுப்மான் கில் 31 ஓட்டங்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 48 ஓட்டங்களையும், அக்சர் படேல் 29 ஓட்டங்களையும், விராட் கோலி ஒரு ஓட்டத்தையும், கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா 18 ஓட்டங்களையும், ரவீர்திர ஜடாஜா 9 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில், நியூசிலாந்து சார்பாக மிட்செல் சாண்ட்னர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ரச்சின் ரவீந்திர மற்றும் கைல் ஜேமிசன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here