G-7 நாடான கனடாவின் நீதி அமைச்சர் பொறுப்புடன் மூன்று அமைச்சுக்கள் தமிழர் கரி ஆனந்தசங்கரி வசம் !

0
9
Article Top Ad

உலகின் வளமிக்க முன்னணி ஏழு நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பை G-7 என அழைப்பார்கள். அதில் கனடாவும் அடங்கும்.இப்படியாக உலகின் முதன்மை நாடொன்றின் முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றிருக்கின்றார் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர் கரி ஆனந்தசங்கரி.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் உலகில் பரந்து பல்வேறு நாடுகளிலும் பாராளுமன்றங்களில் அங்கத்தவர்களாகி பெருமை சேர்ந்துவருகின்றனர்.இதில் பல படிகள் மேலே சென்று கடந்த 2023ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் சிங்கப்பூர் நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம். ஆனால் உலகளவில் அடிக்கடி பேசுபொருளாக இருக்கின்ற நாடுகளில் ஒன்றான கனடாவின் முக்கியத்துவமிக்க அமைச்சுப் பதவிகளில் ஒன்றான நீதி அமைச்சு உட்பட மூன்று அமைச்சுக்களை கரி ஆனந்த சங்கரிக்கு வசம் ஒப்படைத்திருக்கின்றார் கனடாவின் புதியபிரதமர் மார்க் கார்னி

கனடாவின் பிரதமராக நேற்றையதினம் லிபரல் கட்சியின் புதிய தலைவர் மார்க் கார்னி பதவியேற்றதைத்தொடர்ந்து புதிய அமைச்சரவையை நியமித்தார். அதில் உட்கட்சி நெருக்கடியை அடுத்து பதவிவிலகிய முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முக்கிய அமைச்சர்கள் பலரும் பதவிப்பொறுப்புக்களை ஏற்றிருந்தனர். சிலருக்கு அவர்கள் முன்னர் வகித்தபதவிகள் எவ்வித மாற்றமுமில்லாமல் வழங்கப்பட்டது. ஒரு சிலருக்கு மாத்திரமே அவர்கள் முன்னர் வகித்த பதவிகளுடன் புதிய பதவிகளும் வழங்கப்பட்டன. அவர்களில் கரி ஆனந்த சங்கரியும் ஒருவராவார்.

ட்ரூடோவின் அமைச்சரவையில் முடிக்குரியோர் -பூர்வ குடியினர் மற்றும் வடக்கு விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்ததுடன் சிறப்பாக செயற்பட்டிருந்தார்.ஏற்கனவே வகித்த பதவிகளுடன் கரி ஆனந்தசங்கரி தற்போது கனடாவின் நீதி அமைச்சராகவும் சட்டமா அதிபராகவும் புதிய பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் நியமிக்கப்பட்டிருக்கின்றார் .

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here