பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் திடீரென நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சையில் இருப்பதாகவும், அவரை வைத்தியர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து திரும்பிய பிறகு அவருக்கு கழுத்து வலி ஏற்பட்டதாகவும், பரிசோதனைக்காகச் சென்றதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகவில்லை.
மேலதிக செய்தி
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டது இதற்கு காரணம் எனக்கூறப்பட்டது.
இதுகுறித்து ரஹ்மானின் மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்களின் அன்பான ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம்விரும்பிகளுக்கு அவர்களின் அன்பு பிரார்த்தனை மற்றும் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியின்னைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது தந்தை நீர்சத்து குறைபாடு காரணமாக பலவீனமாக இருந்தார்.
அதனால் நாங்கள் வழக்கமான சில பரிசோதனைகளை மேற்கொண்டோம். அவர் இப்போது நலமாக உள்ளார் என்பதை மகிழ்வுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களின் அன்பும் ஆசிர்வாதமும் எங்களுக்கு மிகவும் முக்கியம். உங்களின் அக்கரையையும் ஆதரவையும் நாங்கள் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். அனைவருக்கும் அன்பும் நன்றியும்.” என்று தெரிவித்துள்ளார். பரிசோதனைகள் முடிவந்த நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் நலமுன் வீடுதிரும்பியுள்ளார்.