டெஸ்லாவின் விற்பனையில் பாரிய வீழ்ச்சி

0
1
Article Top Ad

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடங்கிய வரி போர் அமெரிக்க தயாரிப்புகளை, குறிப்பாக டிரம்பின் நெருங்கிய நண்பரும் உலகளாவிய செல்வந்தருமான எலோன் மஸ்க்கின் டெஸ்லா கார்களை கடுமையாகப் பாதித்து வருகிறது.

இதன்படி, ஐரோப்பிய நாடுகளில் டெஸ்லா புறக்கணிப்பு பிரச்சாரம் தீவிரமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா கார் விற்பனை ஜெர்மனியில் 70 சதவீதமும், போர்ச்சுகலில் 50 சதவீதமும், பிரான்சில் 45 சதவீதமும், ஸ்வீடனில் 42 சதவீதமும், நோர்வேயில் 48 சதவீதமும் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

டெஸ்லாவின் பங்கு மதிப்பு ஒரு மாதத்தில் 32 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது. சந்தை மதிப்பில் 120 பில்லியன் டொலர்கள் சரிவு ஏற்பட்டது.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமர்சன் கிரீருக்கு எழுதிய கடிதத்தில், டெஸ்லா நியாயமான வர்த்தக தலையீடுகளை ஆதரிப்பதாகக் கூறியது, ஆனால் அவை அமெரிக்க தயாரிப்புகளைப் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு நிறுவனத்தை வலியுறுத்தியது.

டெஸ்லா எதிர்கொள்ளும் ஒரே சவால் புறக்கணிப்பு மட்டுமல்ல. டெஸ்லா நிறுவனம் பல்வேறு நாடுகளிலிருந்து காரின் பேட்டரி உட்பட பல பாகங்களை இறக்குமதி செய்கிறது.

அமெரிக்கா வரிகளை உயர்த்துவது இறக்குமதி செலவுகளை அதிகரிக்கும், இதனால் உற்பத்தி செலவுகளும் அதிகரிக்கும். இது லாபத்தைக் குறைக்கும்.

இதற்கிடையில், சீனாவிலும் டெஸ்லா பெரும் பின்னடைவைச் சந்தித்து வருவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக டெஸ்லாவின் மிகப்பெரிய சந்தையான சீனாவில், சியோமி மற்றும் பிஒய்டி போன்ற உள்ளூர் நிறுவனங்கள் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சிறந்த வடிவமைப்புகளுடன் மின்சார கார்களை அறிமுகப்படுத்தி, சந்தையில் அலைகளை உருவாக்கியுள்ளன.

இது டெஸ்லாவின் விற்பகையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தனது நண்பரான மஸ்கிற்கு உதவ தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாகவும் கூறப்படுகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை, அவர் ஒரு புதிய சிவப்பு நிற டெஸ்லா காரை வாங்கியுள்ளார்.

அது குறித்த காணொளியையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here