Article Top Ad
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றைய தினம் (25.03.2025) இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.