மியன்மாரை போல் இலங்கையிலும் நிலநடுக்கம் ஏற்படலாம் – எச்சரிக்கை விடுப்பு

0
7
Article Top Ad

மியன்மாரில் நேற்று வெள்ளிக்கிழமை இரண்டு பாரிய நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.

இந்த நிலநடுக்கங்கள் தாய்லாந்து உட்பட பல தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 1002 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அகழ்வு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், எதிர்காலத்தில் இலங்கையிலும் நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

”மியன்மாரில் நடந்தது போன்று என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.

இலங்கையிலும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகளின் பதிவு அண்மித்த காலப்பகுதியில் அதிகரித்து வருகிறது. இலங்கையின் கீழாகவும் இலங்கைக்கு அண்மித்ததாகவும் சிறிய அளவிலான நிலநடுக்க நிகழ்வுகள் பதிவாகி வருகின்றன.

எனினும் இதுவரை இவை சேதங்களை ஏற்படுத்தவில்லை. ஆனால், என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க நிகழ்வு இடம்பெறலாம். அதற்கேற்ற வகையில் போதுமான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.

ஜப்பான் போன்ற நாடுகளில் இதற்குரிய செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளன. ஆகக்குறைந்தது புவிநடுக்கத்திற்குரிய விழிப்புணர்வு செயற்திட்டங்களை இலங்கையின் அனைத்து மக்கள் மத்தியிலும் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.

இல்லையேல் 2004ம் ஆண்டின் சுனாமி அனர்த்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தது போன்று ஒரு புவிநடுக்க அனர்த்தத்தினாலும் இலங்கையில் ஆயிரக்கணக்கானவர்களின் இறப்பதை தவிர்க்க முடியாது என அவர் எச்சரித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here