உலகின் பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக பணக்காரருக்கும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்.
டிவிட்டரின் பெயரை எக்ஸ் [X] என்று மாற்றிய எலான் மஸ்க் பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
இந்நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் நிறுவனத்தை 80 பில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்துள்ளார்.
அதாவது எலான் மஸ்க் தனது சொந்த நிறுவனமான X AI நிறுவனத்துக்கு எக்ஸ் தளத்தை விற்பனை செய்துள்ளார். X AI நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் செயல்பட்டு வருகிறது.
முன்னதாக எக்ஸ் தளத்தில் X AI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் தொழில்நுட்பமான ‘குரோக் 3’ ஏஐ (Grok 3 AI) அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.