உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார், டேராடூன், நைனிடால் மற்றும் உதம் சிங் நகர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 11 இடங்களின் பெயர்கள் மாற்றப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.
இந்த 11 இடங்களுக்கு இந்து தெய்வங்கள், சின்னங்கள், புராணக் கதாபாத்திரங்கள் மற்றும் முக்கிய பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.
அவுரங்கசீப் கல்லறை அகற்றப்படவேண்டும் என்று மகாராஷ்டிராவில் கலவரம் வெடித்த நிலையில், ஹரித்வாரில் உள்ள அவுரங்கசீப்பூர் என்ற இடத்தின் பெயரை சிவாஜி நகர் என்று மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: வீட்டில் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து – 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி
உத்தர்காண்டில் மாற்றப்பட்டுள்ள இடங்களின் பெயர்கள்
1. அவுரங்கசீப்பூர் – சிவாஜி நகர்
2. கஜிவாலி – ஆர்யா நகர்
3. சந்த்பூர் – ஜோதிபா புலே நகர்
4. முகமதுபூர் ஜாட் – மோகன்பூர் ஜாட்
5. கான்பூர் – ஸ்ரீ கிருஷ்ணாபூர்
6. கான்பூர் குர்சாலி – அம்பேத்கர் நகர்
7. இத்ரிஷ்பூர் – நந்த்பூர்
8. அக்பர்பூர் ஃபஜல்பூர் – விஜய்நகர்
9. அப்துல்லாபூர் – தக்ஷ்நகர்
10. பஞ்சக்கி-ஐடிஐ மார்க் – குரு கோல்வால்கர் மார்க்
11. சுல்தான்பூர் பட்டி – கௌசல்யாபுரி