மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கின்றது – மு.க.ஸ்டாலின் கவலை

0
1
Article Top Ad

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சதீவை மீட்க வேண்டும், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க வேண்டும் என இலங்கை செல்லும் பிரதமர் மோடிக்கு, இது குறித்து அந்நாட்டு அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மான நிறைவேற்றி இருந்தோம்.

ஆனால் இது குறித்து அவர் பேசியதாக பெரிதளவில் செய்தி இல்லை, இது வேதனை அளிக்கிறது.இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு சில முன்னெடுப்பகளை எடுத்துள்ளது. இலங்கை சிறையில் உள்ள 97 மீனவர்களை விடுவிக்கவும் பெரிய அளவில் நடவடிக்கை இல்லை.

பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழர் நலனுக்கு தொடர்பில்லாத பிரதமரின் இலங்கை பயணம். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க விட்டாலும் தமிழக அரசு மீனவர்களுக்கு துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்

இந்திய பிரதமர் கடந்த 04,05,06ஆம் திகதிகளில் இலங்கைக்கு அரசுமுறை பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்தப் பயணத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களையும் அவர் சந்தித்திருந்ததுடன், அநுராதபுரம் மகா விகாரையிலும் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்த விஜயத்தில் இலங்கைக்குக்கும் இந்தியாவுக்கும் இடையில் 7 புதிய ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டிருந்தன. அதில் சம்பூரில் சூரிய சக்தி நிலையத்தை அமைத்தல், கேபிள் முறையில் மின்சாரத்தை பரிமாற்றிக் கொள்வதற்கான திட்டத்தை உருவாக்கல் போன்ற ஒப்பந்தங்கள் முக்கியமானவையாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here