பலஸ்தீனை தனி நாடாக ஏற்றுக்கொள்ள பிரான்ஸ் முடிவு – ஜனாதிபதி இமானுவெல் வெளியிட்ட அறிவிப்பு

0
2
Article Top Ad

பலஸ்தீனை தனி நாடாக ஏற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சில மாதங்களில் இந்தத் தீர்மானத்தை எடுக்கவிருப்பதாகவும் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

எகிப்துக்கான விஜயத்தை முடித்துக் கொண்டதன் பின்னர் அவர் இதுபற்றிய நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

அங்கீகாரத்தை நோக்கி நகர்வது அவசியம் என்றும் இதனை ஒருசில மாதங்களில் நிறைவேற்றவுள்ளதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் 193 நாடுகளில் இதுவரை 147 நாடுகள் பலஸ்தீனை தனி அரசாக ஏற்றுக்கொண்டிருக்கிறது.

அந்தவகையில் கடந்தாண்டில் மாத்திரம் பத்து நாடுகள் பலஸ்தீனை தனி நாடாக ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here