Article Top Ad
உலக வங்கி குழுமத்தின் தலைவர் அஜய் பங்கா, நாளை (07) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெறுகின்றது.
இலங்கைக்கும் உலக வங்கிக் குழுவிற்கும் இடையிலான 70 ஆண்டுகளுக்கும் மேலான வலுவான மற்றும் நீடித்த கூட்டாண்மையை பிரதிபலிக்கும் வகையில் அமையும் இந்த விஜயம், இலங்கை பொருளாதார மீட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
சுமார் இரு தசாப்தங்களுக்கு பின்னர் உலக வங்கியின் தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.