ஐ.தே.க வசமிருந்த கொழும்பு மாநகர சபையில் முதல் முறையாக ஆட்சியமைக்க போவது யார்?

0
6
Article Top Ad

கொழும்பு மாவட்டம் கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களை வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 81,814 வாக்குகள் – 48 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 58,375 வாக்குகள் – 29 உறுப்பினர்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 26,297 வாக்குகள் – 13 உறுப்பினர்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 9,341 வாக்குகள் – 5 உறுப்பினர்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – (SLMC) – 8,630 வாக்குகள் – 4 உறுப்பினர்.

ஆளுங் கட்சியான தேசிய மக்கள் சக்தியைவிட எதிர்க்கட்சிகளுக்கு அதிகமான ஆசனங்கள் இருப்பதாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் ஆளும் கட்சியால் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க முடியாது.

கடந்த பல தசாப்தங்களாக கொழும்பு மாநகர சபையை எந்தவொரு கட்சியாலும் கைப்பற்ற முடியாத வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதிக்கம் இருந்தது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பாரிய மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த போதிலும் கொழும்பு மாநகர சபையை அவரால் கைப்பற்ற முடியாது போனது.

பல தசாப்தங்களாக ஐ.தே.க கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைத்துவந்த சூழலில் இம்முறை அந்த வாய்ப்பு பறிபோயுள்ளது. ஐ.தே.கவால் வெறும் 13 ஆசனங்களை மாத்திரமே இம்முறை பெற முடிந்துள்ளது.

கூட்டணி ஆட்சியா அல்லது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி கொழும்பு மாநகர சபையில் இடம்பெற போகிறதென பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here