தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்கப்படுமா? – கஜேந்திரகுமார் விளக்கம்

0
7
Article Top Ad

தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளதால், தமிழ் தரப்பு ஆட்சியமைக்க தமிழரசுக் கட்சிக்கு கொள்கை நிலைப்பாட்டுடன் ஆதரவை வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகார கதிரைக்காக அன்றி, தூய்மையான ஆதரவுக்கான அழைப்பாக இருந்தால் மாத்திரம் தமிழ் தேசிய பேரவை ஆதரவு வழங்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (10) நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒற்றுமையை வலுப்படுத்த தமிழ் அரசியல் பரப்பிலுள்ளவர்களுடன் கலந்துரையாடியதாகவும், அதற்கான சாதகமான பெறுபேறு கிடைத்துள்ளதென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தமிழரசுக் கட்சியை ஓரங்கட்டும் நிலைப்பாடு தம்மிடம் இல்லையெனவும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

பிரதேசத்தின் அபிவிருத்தியை முன்நிறுத்திய ஒரு தேர்தலில் மக்கள் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி வாக்களித்துள்ளனர் எனக் கூறியுள்ள கஜேந்திரகுமார், அதன் பிரகாரம் தொடர்ந்து பயணிப்போம் என மேலும் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில், தமிழர் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சி பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. எனினும், சில சபைகளில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஏற்கனவே தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here