பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்த நிலையில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நேற்று மாலை 5 மணியுடன் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதனை டுவிட்டரில் பதிவு செய்த அதே சந்தர்ப்பத்தில், பாகிஸ்தான் துணை ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சும் உத்தியோகப்பூர்வதாக அறிவித்தது.
இந்நிலையில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட ஒருசில மணிநேரங்களில் ஸ்ரீநகரில் வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன. இந்நிலையில், ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் தாக்குதலை நடத்தி வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், இந்தியா ட்ரோன்களை அனுப்பியதாலேயே தாக்க நேரிட்டது என பாகிஸ்தான் கூறுகின்றது. இந்நிலையில், இருதரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
போர் நிறுத்தத்திற்கு மத்தியிலும் இவ்வாறான சூழல் ஏற்பட்டுள்ளமை மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. எவ்வாறெனினும், இன்றுகாலை ஸ்ரீநகரில் கடைகள் திறக்கப்பட்டு வழமையான செயற்பாடுகள் இடம்பெறுவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த யுத்த நிறுத்தம் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என தெரியாதென குறிப்பிடும் மக்கள், அமைதியான சூழ்நிலையே அவசியம் எனத் தெரிவித்துள்ளனர்.