வெளிநாட்டு ஊழியர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதை குறைக்க பிரித்தானியா நடவடிக்கை!

0
3
Article Top Ad

அதிக அளவிலான வெளிநாட்டு ஊழியர்களை தமது நாட்டிற்குள் அனுமதிப்பதை குறைத்துக்கொள்ளும் திட்டங்களை பிரித்தானிய அரசாங்கம் நேற்று (11) அறிவித்துள்ளது.

திறனாளர் விசாக்களை பட்டதாரிகள் செய்யும் வேலைகளுக்கு மட்டும் வழங்கி நிறுவனங்களில் உள்நாட்டு ஊழியர்களுக்குக் கூடுதல் பயிற்சியளிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானிய அரசாங்கத்தின் புதிய திட்டங்களின் கீழ், திறனாளர் விசாக்கள் பட்டதாரிகளுக்கு மட்டும் வழங்கப்படுவதுடன் குறைவான திறன்கள் தேவைப்படும் தொழில் விசாக்கள் நாட்டின் தொழில்துறைச் செயல்பாட்டுக்கு முக்கியமானதாக விளங்கும் வேலைகளைச் செய்வோருக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் இதனை ஈடு செய்ய நிறுவனங்கள், பிரித்தானிய ஊழியர்களுக்குக் கூடுதல் பயிற்சியளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டங்கள் , இன்று (மே 12) வெளியிடப்படவுள்ள வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் என பிரித்தானியாவின் ஆளும் தொழிற்கட்சி அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here