Article Top Ad
அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசன்ட் இன்று (12)அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் அறிவித்த வரி அதிகரிப்பை தொடர்ந்து சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான வரியை உயர்த்தியது. இருநாடுகளுக்கும் இடையிலான இந்த வர்த்தக போர் உலக பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்திய நிலையில், சுவிட்சர்லாந்தில் கடந்த இரண்டு நாட்களாக உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
இதன் பின்னர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த வரி குறைப்பிற்கான இணக்கப்பாடு குறித்து அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசன்ட் அறிவித்தார்.
அமெரிக்கா மற்றும் சீனாவின் இந்த இணக்கப்பாட்டினை உலக நாடுகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.