Article Top Ad
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு, தேசிய மக்கள் சக்திக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு வழங்காதென அதன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். தேசிய நல்லிணக்கம், இணங்களுக்கு இடையிலான நல்லுறவு என்பவற்றை ஏற்படுத்தத் தவறியதால் தமது கட்சி ஆதரவளிக்காதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (13) கட்சி உறுப்பினர்களுடன் நடத்திய சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியில் பங்கெடுக்கும் விருப்பம் தமது கட்சிக்கு இல்லையென குறிப்பிட்ட டக்ளஸ், ஏனைய தமிழ் கட்சிகள் அதிகாரபூர்வமாக ஆதரவு கோரும் பட்சத்தில் சூழ்நிலையின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.