எதிர்க்கட்சிகளின் கூட்டிணைவு – ரணில் தலைமையில் பேச்சுவார்த்தை

0
5
Article Top Ad

தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்திலும் ஆட்சியமைப்பதற்காக, எதிர்கட்சிகள் மத்தியில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து ஆட்சியமைக்கும் முனைப்பில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

அதன் பிரகாரம், ஆட்சி அமைக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான பெயர் பட்டியலைத் தயாரிப்பதற்காக, சம்பந்தப்பட்ட கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் இன்று (15) கூடி கலந்துரையாடவுள்ளனர்.

ரணில் தலைமையிலான சந்திப்பில், முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதித்துவப்படுத்தி நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி அநுர பிரியதர்ஷன யாப்பா, தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், புதிய ஜனநாயக முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி அசங்க நவரத்ன, சுகீஸ்வர பண்டார, வீர குமார திசாநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேமலால் சி தொலவத்த, நிமல் லன்சா, மொஹமட் முஸம்மில், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here