லக்ஷ்மன் யாப்பா உள்ளிட்ட இருவருக்கு குற்றப்பத்திரிகை

0
6
Article Top Ad

முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோர் மீது, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

2014ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவி நிறைவு ஆண்டு விழாவை முன்னிட்டு, இலங்கை முதலீட்டு சபையின் நிதியைப் பயன்படுத்தி செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம் அரசாங்கத்துக்கு 17 இலட்சம் ரூபாவுக்கும் மேல் நட்டம் ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் எனவும் குற்றம்சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பாக 15 சாட்சிகள் பெயரிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here