முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி பிரித்தானியாவில் பேரணி – சர்வதேசத்துக்கு அழுத்தம்

0
5
Article Top Ad

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் 16ஆவது ஆண்டு நிறைவுதினம் ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நாளையொட்டி தமிழர் பரப்பிலும் உலகலாவிய ரீதியிலும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், பிரித்தானியாவிலும் 18.05.2025 அன்று முள்ளிவாய்க்கால் மற்றும் யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக நீதி கோரி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இலங்கையில் இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வையும் வலியுறுத்திய கோரிக்கைகளை பேரணியில் கலந்துகொண்டவர்கள் முன்வைத்தனர்.

பிரித்தானியா, கனடா, ஐரோப்பிய நாடுகள் உட்பட சர்வதேச நாடுகள் ஈழத் தமிழர்கள் விவகார்தில் நீதியை பெற்றுக்கொடுக்கும் செயல்பாட்டில் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்றும் பேரணியில் கலந்துகொண்ட உலகத் தமிழர்கள் வலியுறுத்தினர்.

இதேவேளை, கடந்த சில நாட்களாக இனவழிப்பை மறைத்து நீதியை மழுங்கச் செய்யும் செயல்பாடுகளை முன்னெடுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு தமது கண்டனத்தையும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here