Article Top Ad
சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தோம் என்றும், யாரையும் பிடிப்பதற்காக அல்ல என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
படைவீரர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் இன்று (20) காலை நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் படைவீரர் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோது இவ்வாறு குறிப்பிட்டார்.
தமது கடமையை நிறைவேற்றுவதற்காகவே இங்கு வந்ததாக குறிப்பிட்ட மஹிந்த, யுத்தம் என்பது ஒரு துயரச் சம்பவம் என்று கூறியுள்ளார்.
மேலும், நாட்டைப் பாதுகாப்பதற்காகவே யுத்தம் செய்தோம் என்றும், எதிர்காலத்தில் இவை மீண்டும் நடைபெறுமா இல்லையா என்பது வரும் அரசாங்கங்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாயபய ராஜபக்ஷவும் கலந்துகொண்டார்.