தமிழ் மக்களுக்குச் சமஷ்டி அடிப்படையிலான நிரந்தர தீர்வு வேண்டும் – அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களை நேரில் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவையினர்

0
5
Article Top Ad

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையினர் அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை அந்தந்தத் தூதரங்களில் சந்திப்பு நடத்தினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், சிரேஷ்ட சட்டத்தரணி ந.காண்டீபன் ஆகியோர் இந்த சந்திப்புகளில் கலந்துகொண்டனர்.

இதன்போது அவர்கள், தமிழ் மக்களுக்குச் சமஷ்டி அடிப்படையிலான நிரந்தர தீர்வு வேண்டும், வடக்கில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பை அரசு நிறுத்த வேண்டும் எனப் பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மேற்படி குழுவினர் முதலில் அமெரிக்க தூதுவரை சந்தித்துவிட்டு பின்னர் சுவிஸ் நாட்டுத் தூதுவரைச் சந்தித்துத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here