வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கான காலத்தை நீடித்தார் ட்ரம்ப்

0
17
Article Top Ad
வரிகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான காலத்தை, ஜுன் மாதம் 9ஆம் திகதி வரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீடித்துள்ளார்.
தனக்கும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கும் இடையே ஒரு சிறந்ததொரு பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அதுவே இந்த தாமதத்திற்கு வழிவகுத்ததாகவும் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய பொருட்களுக்கு 20 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி கடந்த மாதம் விதித்திருந்தார்.  பின்னர் அந்த வரி 10 சதவீதத்தால் குறைக்கப்பட்டது.  கடந்த வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தையில் திருப்தியடையாத நிலையில், 50 சதவீத வரிகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்தினார்.
இதன் பின்னணியிலேயே நேற்றைய பேச்சுவார்த்தை அமைந்தது மற்றும் கால நீடிப்பும் வழங்கப்பட்டுள்ளது.