Article Top Ad

2023ஆம் ஆண்டுடன் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு இரத்மலானை – பலாலி விமான நிலையத்திற்கு இடையிலான சேவை இன்று (02) ஆரம்பமாகியுள்ளது.
அதன் பிரகாரம் இன்று தகுதிகாண் சேவை முன்னெடுக்கப்பட்டது. உள்ளூர் விமானசேவையை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பீரிஸ் ஏவியேஷன் நிறுவனத்தின் ஊடாக, இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் இந்த விமான சேவை முன்னெடுக்கப்படுகின்றது.
வாரத்தில் மூன்று நாட்களுக்கு இந்த சேவையை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக, குறித்த விமானசேவை நிறுவனம் கூறியுள்ளது.
ஒரு வழி பயணத்திற்கு 1 மணித்தியாலமும் 10 நிமிடங்களும் செல்லும் என்பதோடு, இருவழி கட்டணமாக 68,000 ரூபாய் அறவிடப்படும்.
இந்த விமானத்தில் 11 பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும்.


