கூட்டணி அமைக்க வருமாறு ஈபிடிபி-க்கு அழைப்பு

0
106
Article Top Ad

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க கூட்டணியமைப்பது குறித்த பேச்சுவார்த்தைக்கு, ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கு இலங்கை தமிழரசு கட்சி அழைப்பு விடுத்துள்ளது. கட்சியின் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சங்கு – சைக்கிள் கூட்டணி உள்ளிட்ட தரப்பினரும் ஆதரவு கோரியதாக டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், எதிர்கட்சியில் இருந்துகொண்டு தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவே உத்தேசித்துள்ளதாக டக்ளஸ் கூறியுள்ளார்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிரசுக் கட்சி பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. எனினும், சில சபைகளில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இல்லாத காரணத்தால், ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.