கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி: ஆரம்ப அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

0
189
Article Top Ad

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த ஆண்டு கண்டெடுக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 52 எலும்புக்கூடுகளுக்கான ஆரம்ப பகுப்பாய்வு அறிக்கை, முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் படி, உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினராவர் என்பதும், அவர்களில் பலர் வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பகுப்பாய்வில் வெளியான தகவல்கள்

  • 31 எலும்புக்கூடுகள் பெண்களுக்குரியது,
  • 21 எலும்புக்கூடுகள் ஆண்களுக்குரியது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • உயிரிழந்தவர்கள் 12 முதல் 53 வயதுவரை உள்ளவர்களாக இருந்துள்ளனர்.
  • 32 பேர் வெடிப்புச் சம்பவங்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
  • 7 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு
  • 12 பேர் இரண்டும் சேர்ந்து (வெடிப்பு + துப்பாக்கிச் சூடு) காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இம்மனிதப் புதைகுழி, 2024 ஜூன் 29ஆம் திகதி கொக்குத்தொடுவாய் பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்ட குழாய் நீர் வேலைத் திட்டத்தின் போது அகழ்வுப் பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்டது.