யுக்ரைனுக்கு பெட்ரியோட் ஏவுகணைகள் – ட்ரம்ப் அறிவிப்பு

0
204
Article Top Ad

யுக்ரைனுக்கு பெட்ரியோட் (Patriot) வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்கும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தொடர்ந்து சந்தர்ப்பத்துக்கு ஏற்ப பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாகவும், யுக்ரைன் தனது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முன்னெடுப்பு அவசியமானது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

யுக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவரும் முனைப்பில் ட்ரம்ப் ஈடுபட்டு வந்தாலும், அதனை புட்டின் எதிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் விளைவாக, தற்போது டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவுக்கு எதிரான திடமான நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.

இதேவேளை, போரை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் ரஷ்யா மீது 100 வீதம் இரண்டாம் நிலை வரி விதிக்கப்படும் என நேற்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.