ரஷ்யாவின் வர்த்தக பங்காளிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அச்சுறுத்தல் உட்பட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமீபத்திய அறிக்கைகள் தீவிரமானவை என்றும் அவற்றை மதிப்பிடுவதற்கு நேரம் தேவை என்றும் ரஷ்யா கூறியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் அதிகரித்து வரும் விரக்திக்கு மத்தியில், நேட்டோ வழியாக உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகள் உட்பட புதிய ஆயுதங்களை வழங்குவதாக ட்ரம்ப் திங்களன்று அறிவித்தார். மேலும் 50 நாட்களுக்குள் மொஸ்கோ ஒரு சமாதான ஒப்பந்தத்திற்கு உடன்படத் தவறினால் ரஷ்ய ஏற்றுமதிகளை வாங்குபவர்கள் கடுமையான வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறினார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் அறிக்கைகள் மிகவும் தீவிரமானவை என்றும் அவற்றில் சில ஜனாதிபதி புடினுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றும் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் குறிப்பிட்டுள்ளார். இவை குறித்து ஆராய்வதற்கு அவசியம் நேரம் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

