தமிழர்கள் எதிர்கொண்ட கொடூரங்களை உலகம் மறந்துவிடக் கூடாது – கன்சர்வேடிவ் கட்சி

0
182
Article Top Ad

தமிழ் மக்களுடன் ஒற்றுமை கொண்ட தனது கட்சியின் நிலைப்பாட்டை வலியுறுத்தும் அறிக்கையொன்றை கருப்பு ஜூலையின் 42வது ஆண்டு நினைவாக, கனடா கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பியர் பொய்லிவ்ரே வெளியிட்டுள்ளார். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என்பதை தனது கட்சி தெளிவாக ஏற்றுக்கொள்வதாகவும், அதற்குப் பொறுப்புக்கூறலை நோக்கி உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

1983 இன் வன்முறையின் வடுவை நினைவுகூரும் இந்த தருணத்தில், தமிழர்கள் எதிர்கொண்ட கொடூரங்களை உலகம் மறந்துவிடக் கூடாது என அவர் கூறினார்.

அண்மையில் யாழ்ப்பாணம் செம்மணியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் குழந்தைகள் உட்பட பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை, இனப்படுகொலையின் புதிய ஆதாரங்களாக காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொய்லிவ்ரே தனது கட்சி வகுக்கும் எதிர்கால நடவடிக்கைகளையும் விளக்கினார்:

  • இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களுக்கு மாக்னிட்ஸ்கி பாணி தடைகளை விதித்தல். (Magnitsky-style)
  • பொறுப்பாளர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த ஆதரவு
  • போர்க் குற்றவாளிகள் கனடாவில் தஞ்சம் புக அனுமதி மறுத்தல்.
  • செம்மணியில் இடம்பெறும் அகழ்வில் சர்வதேச தலையீட்டை உறுதி செய்தல்