இந்தியாவை குறிவைக்கும் ட்ரம்ப் – 25% வரி அறிவிப்பு

0
190
Article Top Ad

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த வரி விதிப்பு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றும், இதுகுறித்து இருநாட்டு அதிகாரிகளும் முன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரி விதிப்புக்கு பின்னணி என்ன?

இந்த நடவடிக்கையின் முக்கியமான காரணம், இந்தியா ரஷ்யாவுடன் வளர்த்துவரும் வணிக உறவுகளாகும். குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெருமளவில் கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ ஆயுதங்களை வாங்கி வருகிறது. இது அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைக்கு எதிராகும் என்றும், உக்ரைன் மீது தாக்குதல்களை தொடரும் ரஷ்யாவுக்கு வருவாய் செல்லக் கூடாது என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

முன்னதாக,  “ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி விதிக்கப்படும்” என எச்சரித்திருந்தார். இந்த எச்சரிக்கையின் தொடர்ச்சியாகவே இந்தியா மீது 25% வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி யாரை பாதிக்கும்?

இந்த அறிவிப்பின் மூலம், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தொழில்துறை உபகரணங்கள், வேளாண் பொருட்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பல பொருட்கள் அதிக விலைக்கு அமெரிக்க சந்தையில் விற்கப்படும். இதனால் இந்திய நிறுவனங்கள் போட்டியில் பின் தள்ளப்படக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருநாட்டு உறவுகள் மீது தாக்கம்

இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த ஆண்டுகளில் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத் துறைகளில் பல ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. ஆனால் ரஷ்யாவுடன் இந்தியா வைத்திருக்கும் உறவுகள் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படுமா என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.

இந்தியாவின் பதில்?

அமெரிக்காவின் வரி இந்த அறிவிப்புக்கு இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பதில் இன்னும் வரவில்லை. ஆனால், இருநாட்டு உயர் அதிகாரிகளும்  தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், கலந்துரையாடல் ஊடாக தீர்வு காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.