வடக்கு மாகாணத்திலிருந்து செயற்படும் ஊடகவியலாளர் குமணன் கணபதிப்பிள்ளையை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அலம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் கிளை அலுவலகத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி அவரை ஆஜராகுமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
வட பிராந்தியத்தில் இடம்பெறும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக புகைப்பட ஆவணங்கள் சகிதம் ஊடகவியலாளர் குமணன் வெளிக்கொண்டு வருகின்றார். குறிப்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பாக விபரங்களை புகைப்படங்கள் ஊடாக தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றார்.
இந்நிலையில், கடந்த அரசாங்கங்களைப் போல இந்த ஆட்சியிலும் தமிழ் ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்படுகின்றனரா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

