இரு முக்கிய வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளவுள்ளார் அநுர

0
191
Article Top Ad

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் இரண்டு முக்கியமான வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 23 அன்று அமெரிக்காவுக்கு புறப்படும் ஜனாதிபதி, 24ஆம் திகதி நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை அமர்வில் உரையாற்றவுள்ளார். அத்தோடு, உலகின் பல்வேறு தலைவர்களுடன் தனிப்பட்ட சந்திப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பின்னர், செப்டம்பர் 27 அன்று அவர் ஜப்பானின் ஒசாகாவுக்கு பயணிக்கவுள்ளார். அங்கு எக்ஸ்போ 2025 நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார். ஜப்பான் பிரதமர் சிகெரு இசிபாவின் அழைப்பின் பேரில் டோக்கியோவுக்குச் செல்வார்.

இந்த விஜயங்களின் போது ஜப்பானில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துவது போன்ற முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.

அத்தோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார விடயங்கள் குறித்தும் பேசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.