காசா நகர ஆக்கிரமிப்பு திட்டத்திற்கு எதிராக இஸ்ரேலில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

0
207
Article Top Ad

காசா நகரத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக ஜெருசலேமின் தெருக்களில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

முன்னாள் இராணுவ வீரர் மேக்ஸ் க்ரெஷ், நான் மறுக்கிறேன் என்று எழுதப்பட்ட பலகையை ஏந்தி கலந்து கொண்டார். “போரின் போது பணியாற்றிய 350க்கும் மேற்பட்ட முன்னாள் வீரர்களாகிய நாங்கள், நெதன்யாகுவின் அரசியல் நோக்கமுள்ள போரில் தொடர்ந்து பணியாற்ற மறுக்கிறோம்” என்று அவர் பிபிசி செய்திச்சேவையிடம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஹைஃபா, டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களில் இவ்வாறான போராட்டங்கள் நடைபெற்றன.

காசாவில் தனது போரை விரிவுபடுத்தும் தீர்மானத்தை இஸ்ரேல் எடுத்துள்ளது. இதற்கு, ஐ.நா., இங்கிலாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, துருக்கி, ஜெர்மனி, பின்லாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகள் கடுமையான கண்டனம் தெரிவித்தன.

முழுமையான இராணுவ ஆக்கிரமிப்பானது, பாலஸ்தீன பொதுமக்கள் மற்றும் காசாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு பேரழிவினை ஏற்படுத்தும் என ஐ.நா. எச்சரித்துள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐந்து முக்கிய கொள்கைகளை நிர்ணயித்துள்ளது:

  1. ஹமாஸை நிராயுதப்படுத்தல்

  2. அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்தல்

  3. காசா பகுதியை இராணுவமயமாக்கல்

  4. பிரதேசத்தின் பாதுகாப்பை இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரல்

  5. ஹமாஸோ அல்லது பாலஸ்தீன அதிகாரசபையோ அல்லாத ஒரு மாற்று சிவில் நிர்வாகத்தை நிறுவல்.எவ்வாறாயினும், இந்தத் திட்டம் ஏற்கனவே பணயக்கைதிகளாக இருப்பவர்களுடைய உயிருக்கும் மாத்திரமன்றி, பாரிய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் என பல்வேறு நாடுகளும் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.