பாகிஸ்தான் வெள்ளத்தில் 337 பேர் உயிரிழப்பு – பலரை காணவில்லை

0
168
Article Top Ad

பாகிஸ்தானின் பஜவுர், புனேர், ஸ்வாட், ஷாங்லா, டோர்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை சுமார் 337 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

300இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மலைப்பாங்கான பிரதேசத்தில் வசித்தவர்கள் ஆவர். மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, நிவாரண உதவிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மழை தொடர்ச்சியாக பெய்துவரும் நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் இன்றும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். உள்ளூர் நிர்வாகங்களை விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜூன் 26 முதல் நாட்டில் வழக்கத்தை விட அதிகமான பருவமழை பெய்து 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.