மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபிவிருத்தித் திட்டங்கள் – மன்னாரில் தொடர் போராட்டம்

0
194
Article Top Ad

மன்னாரில் முன்னெடுக்கப்படும் உத்தேச காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுத் திட்டங்களுக்கு எதிராக மன்னார் மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் திட்டங்கள் முழுமையாக நிறுத்தப்படும் வரை போராட்டத்தை தொடரவுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். குறித்த திட்டம் முன்னெடுக்கப்படும் இடத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் கைகோர்த்துள்ளதோடு, இந்தப் போராட்டம் 16 நாட்களாக தொடர்கின்றது.

இந்தத் திட்டங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, குறிப்பாக மண்ணின் தன்மை பாதிக்கப்படும் போது விவசாயிகள் பாதிக்கப்படுகின்றமை, உயிர்ப்பல்வகைமையில் ஏற்படும் மாற்றத்தால் ஏற்படும் அழிவு போன்றவற்றை இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் தமது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதோடு, வாழ்வதற்கான தமது உரிமை இழக்கப்படும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் முழுவதும் சமூகங்களை ஒன்றிணைத்த ஒரு அடிமட்ட இயக்கமாக இந்த போராட்டம் வளர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும், வெவ்வேறு கிராமங்கள் சுழற்சி போராட்டத்தில் பங்கேற்று குரல் கொடுத்து வருகின்றனர்.