ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை வழங்கப்பட்டது

0
86
Article Top Ad

அரச நிதியை தனியார் பயணத்திற்கு பயன்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (26) பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.

தலா 50 இலட்சம் ரூபாய் வீதம் 3 சரீரப்பிணைகள் என்ற அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 22ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட ரணில், இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார்.

இன்றைய தினம் ஸூம் தொழிநுட்பம் வழியாக அவர் நீதிமன்ற நடவடிக்கையில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.