ரணில் இன்னும் குணமடையவில்லை – மாநாடு ஒத்திவைப்பு

0
75
Article Top Ad

ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு செப்டெம்பர் 6ஆம் திகதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த மாநாடு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் உடல்நலம் இன்றும் பூரணமாக வழமைக்கு திரும்பவில்லை என்றும், அதனால் இந்த மாதத்தில் வேறு ஒரு தினத்தில் நடத்த தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.க மாநாட்டிற்காக ரணில் எதிர்கட்சிகளின் தலைவர்களை நேரில் சென்று அழைக்கவுள்ளதாக ஏற்கனவே கட்சி தகவல்கள் தெரிவித்திருந்தன. அவர் கைதுசெய்யப்பட்டபோது எதிரணியினர் பக்கபலமாக நின்ற நிலையில், அவர்களை ஒன்றிணைக்கும் வகையிலும் இந்த மாநாடு இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.