நேபாளத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின்போது நேற்று 19 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள், பாராளுமன்றம், உயர் நீதிமன்றம், முன்னாள் பிரதமரின் இல்லம் என அரச சொத்துக்களை தீயிட்டு கொழுத்தியுள்ளனர். இதனையடுத்து உயிரிழப்பு 22ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஊழல் மற்றும் சமூக ஊடக தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு முன்னெடுத்த போராட்டத்தின்போது, அரச படைகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நேற்று 19 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து வெகுண்டெழுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அரச கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ளனர்.
நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்துள்ளார். இச்சந்த்தரப்பத்தில் ஜனாதிபதி ராமச்சந்திர பவுடல் தேசிய ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

