அமுலுக்கு வந்தது ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டம்

0
71
Article Top Ad

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து சபாநாயகர் அதனை இன்று (10) சான்றுரைப்படுத்தினார். அதன் பிரகாரம், இலங்கையில் இன்றுமுதல் ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டம் உடன் அமுலுக்கு வந்துள்ளது.

கடந்த ஓகஸ்டில் முன்வைக்கப்பட்ட இந்த சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டு, நேற்று அதன் தீர்ப்பு வெளியாகியது. குறித்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர்நீதிமன்றம் தனது வியாக்கியானத்தில் குறிப்பிட்டது.

இதனையடுத்து இன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றதோடு, ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக ஒரேயொரு வாக்கும் அளிக்கப்பட்டது. இதன் பிரகாரம், 150 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகர் அதில் கையெழுத்திட்டுள்ளார்.